ஃபெத்துல்லா குலனுடன் தொடர்பு சந்தேகத்தின் பேரில் துருக்கியில் 13,000 போலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

  • 4 அக்டோபர் 2016

அமெரிக்காவைச் சேர்ந்த முஸ்லீம் மதகுரு ஃபெத்துல்லா குலனுடன் தொடர்பு உள்ளதாகச் சந்தேகத்தின் பேரில் ஏறக்குறைய 13,000 போலிஸ் அதிகாரிகளை துருக்கி பணியிடைநீக்கம் இடைநிறுத்தம் செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை THOMAS URBAIN/AFP/Getty Images
Image caption முஸ்லீம் மதகுரு ஃபெத்துல்லா குலன் (கோப்புப்படம்)

இடை நீக்கம் செய்யப்பட்டவர்களில் 2,500க்கும் மேற்பட்டவர்கள் தலைமை பொறுப்பில் இருந்த போலிஸ் அதிகாரிகள் ஆவர்.

ஆட்சிக்கவிழ்ப்பிற்கு குலன் பின்புலமாக இருந்ததாக துருக்கி அரசு குற்றமச்சாட்டியுள்ளதை அவர் மறுத்துள்ளார்.

அரசாங்க வேலைகளில் இருந்து, பல்லாயிரக்கணக்கானவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மற்றும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்