எத்தியோப்பியாவில் அரசியல் மற்றும் பொருளாதார பாகுபாட்டை எதிர்த்து போராட்டம்

  • 4 அக்டோபர் 2016

எத்தியோப்பியாவில் நைஜீரியாவைச் சேர்ந்த வர்த்தக பிரமுகரான ஆலிகோ டங்கொட்டேவின் ஒரு சிமெண்ட் ஆலையை போராட்டக்காரர்கள் தாக்கியதாகவும், லாரிகள் மற்றும் இயந்திரங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதூகவும் ஒரோமோ பகுதியில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை GULSHAN KHAN/AFP/Getty Images)
Image caption எத்தியோப்பியாவில், ஒரோமோ பகுதிவாசிகள் அரசியல் மற்றும் பொருளாதார பாகுபாட்டை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (கோப்புப்படம்)

மேலும் போராட்டக்காரர்கள் காவல் நிலையத்தைத் தாக்கினர், சிறைக் கைதிகளை விடுவித்தனர், அரசு வாகனங்களுக்கு தீ வைத்தனர் .

ஞாயிற்றுக் கிழமையன்று ஒரு கலாசார விழாவின் போது டஜன் கணக்கான ஒரோமோ பகுதிவாசிகள் இறந்த போது, அது வன்முறை நிகழ்வாக மாறியது. அவர்களது இறப்பைக் கண்டித்து, அந்தப் பகுதியில் உள்ள ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எத்தியோப்பியாவின் மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பகுதியாக உள்ள ஒரோமோவை சேர்ந்தவர்கள் கடந்த சில மாதங்களாக , அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களில் தாங்கள் ஓரங்கட்டப்பட்டதாகக் கூறி,போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.