பிரிட்டன் பவுண்டின் மதிப்பு 31 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி: பிரக்ஸிட்டின் விளைவா?

  • 4 அக்டோபர் 2016
படத்தின் காப்புரிமை Getty Images

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சத்திற்கு மத்தியில், டாலருக்கு நிகரான பிரிட்டன் பவுண்டின் மதிப்பு, 31 வருடங்களில் இல்லாத அளவு கடுமையாக சரிந்துள்ளது.

இன்று காலை நடந்த வர்த்தகத்தில், 1985 ஆம் ஆண்டிலிருந்து கண்டிராத சரிவாக டாலருக்கு நிகரான பவுண்டின் மதிப்பு 0.5 சதவீதத்தை அடைந்தது.

மார்ச் மாதத்தின் கடைசியில், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான நடைமுறைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் தெரீசா மே அறிவித்துள்ளார்.

இதன் மூலம், ஐரோப்பிய சந்தை என்ற ஒற்றை மார்க்கெட்டிலிருந்து பிரிட்டன் விலகும் என்றும் அறிவித்துள்ளார்.

பவுண்டு மதிப்பு வீழ்ச்சியால், லண்டனின் ஃஎப்டிஎஸ்இ100ன் பங்குச் சந்தை, 16 மாதங்களில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது.

இந்த ஃஎப்டிஎஸ்இ 100 என்பது வலுவிழந்த பவுண்ட் மதிப்புகளால் நன்மையடையும் பன்னாட்டு நிறுவனங்களால் ஆனது.