பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல்

  • 4 அக்டோபர் 2016

பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், அடுத்த மாதம் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வழி செய்யப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்தியாவும் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளித்துள்ளது.

ஸ்டிரஸ்பர்கில் நடைபெற்ற வாக்கெடுப்பில், உலக அளவில் மாசு ஏற்படுத்துதலில் 55 சதவீத பங்கு வகிக்கும் குறைந்தது 55 நாடுகளால் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அந்த ஒப்பந்தம் இரண்டு தொடக்க நிலைகளைக் கடந்து விட்டது.

ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்ட பத்திரங்கள் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்ட முப்பது நாட்களுக்கு பிறகு, அது நடைமுறைக்கு வரும்.

பாரிஸ் ஒப்பந்தம் கடந்த வருடம் சுமார் 200 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது; அதிகரித்துவரும் புவி வெப்பமயமாதலைக் கட்டுக்குள் கொண்டு வருவதே அந்த ஒப்பந்தத்தின் பிரதான இலக்காகும்.

தொடர்புடைய தலைப்புகள்