துருக்கி அதிபருக்கு எதிராக அவதூறு: கைவிடப்பட்ட வழக்கு

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption எர்துவான் மற்றும் ஜான் போஹெர்மான்

ஜெர்மனியைச் சேர்ந்த அரச வழக்கறிஞர்கள், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நகைச்சுவை படைப்பாளருமான ஜான் போஹெர்மான், துருக்கி அதிபருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கு விசாரணையை கைவிட்டுள்ளனர்.

அவர் கிரிமினல் குற்றம் புரிந்ததற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொலைக்காட்சியில் தனக்கு எதிராக ஆபாச கவிதையொன்றை வாசித்த போஹெர்மான் அயல்நாட்டு தலைவர்களை அவமதிப்பதற்கு எதிரான சட்டத்தை மீறிவிட்டதாக துருக்கி அதிபர் எர்துவான் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்