யானைகளைக் காப்பாற்ற நாய்களின் உதவி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

யானைகளைக் காப்பாற்ற நாய்களின் உதவி

ஆப்ரிக்காவில் சட்டவிரோதமாக யானைகள் கொல்லப்படுவது அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்து வருகின்றன.

கடந்த ஏழு ஆண்டுகளில் அங்கு மூன்றில் ஒருபங்கு யானைகள் கொல்லப்பட்டுள்ளன.

வனப்பாதுகாவல்கள் அவற்றை பாதுகாக்க புதிய வழிகளை முயற்சித்து வருகின்றனர்.

அவ்வகையில் வானிலிருந்து நாய்களுடன் குதித்து வேட்டையாடுபவர்களை பிடிக்கும் புதிய முயற்சியும் ஒன்று. அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள முதல் நாய் ஏரோ.

சட்டவிரோத வேட்டைக் கும்பலைப் போல தென் ஆப்ரிக்க அதிகாரிகளும் உத்திகளை மாற்ற ஆரம்பித்துள்ளனர்.

வானிலிருந்து வனப்பாதுகாவலர்களுடன் குதிக்கும் இந்த நாய், உடனடியாக பாய்ந்து சென்று, வேட்டைக்காரர்கள் கைது செய்யப்படும்வரை அவர்களை ஓடவிடாமல் தடுக்கும்.

இப்படியான நாய்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே ஆப்ரிக்க யானைகளை காப்பாற்றும் நோக்கில், ஜெஹனஸ்பர்கில் மாநாடு ஒன்றும் நடைபெறுகிறது. இங்கு எடுக்கப்படும் முடிவுகள் அந்த யானைகளைக் காப்பாற்ற ஒவ்வொரு நாடும் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாக அமையும்.

ஆனால் எடுக்கப்படும் முடிவுகளுக்கு நாடுகள் கட்டுப்பட வேண்டும்.

நமீபியா, ஜிம்பாப்வே மற்றும் இதர தென்னாப்ரிக்க நாடுகள் யானைகளை வேட்டையாடி தந்தங்களை விறபதன் மூலம் கிடைக்கும் நிதி, அவற்றை பாதுக்காக்க முடியும் என நம்புகின்றன.

ஆனால் கென்யா மற்றும் இதர 28 நாடுகள் தந்த வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் எனக் கோருகின்றன.