எத்தியோப்பியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் புதிய ரயில் பாதை தொடக்கம்

எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபபாவை, செங்கடல் துறைமுகமான ஜிபூட்டியுடன் இணைக்கும் புதிய மின்சார ரயில் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இருதரப்புப் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் ஒரு முயற்சியாக அந்த ரயில் பாதை பார்க்கப்படுகிறது.

சாலை மார்க்கமாக செல்லும் பல நாள் பயணத்துடன் ஒப்பிடுகையில், அந்த ரயில் பத்து மணி நேரத்தில் 750 கிமீ தூரம் பயணம் செய்கிறது.

3.4 பில்லியன் டாலர் மதிப்பில் இரண்டு சீன நிறுவனங்களால் அந்த ரயில் பாதை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அது சீன பணியாளர்களை கொண்டு இயக்கப்படும்.

எத்தியோப்பியாவின் சுமார் 90 சதவீத சர்வதேச வர்த்தகம், ஜிபூட்டி துறைமுகத்தின் வழியாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்