பிரிட்டன், இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான அணுஆயுத பரவல் தொடர்பான வழக்கை நிராகரித்தது ஐ.நா. நீதிமன்றம்

  • 5 அக்டோபர் 2016

பிரிட்டன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அணு ஆயுதப் பரவலை நிறுத்த தவறியதாகக் குற்றம்சாட்டி, மார்ஷல் தீவுகள் தொடுத்த வழக்கை ஐக்கிய நாடுகள் சபையின் மிக உயர்ந்த நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை ED OUDENAARDEN/AFP/Getty Images
Image caption தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றம்

தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றம் இந்த விவகாரம் தனது அதிகாரத்திற்கு உட்பட்டது அல்ல என்று கூறியது.

மார்சல் தீவுகள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள், 1968ல் அணு பரவல் தடை உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் தங்கள் கடமைகளில் இருந்து தவறிவிட்டன என்று வாதிட்டனர்.

பிரிட்டன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள்தான் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள். மேலும் இந்த நாடுகள்தான் சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டு அதை அங்கீகரிக்கும் நாடுகள் .

பிகினி அடால் என்ற இடத்தில் நடந்த அழிவுகரமான அமெரிக்க குண்டு சோதனைகளைத் தொடர்ந்து, அணு உலை எதிர்ப்பு நடவடிக்கைகளில் மார்ஷல் தீவுகளைச் சேர்ந்தவர்கள் முன்னணியில் உள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்