ஆப்கானில் தாலிபான், ஆப்கான் அரசு படையினர் கடும் சண்டை

ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தாலிபான் போராளிகளுக்கும் ஆப்கானிய பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்துவருகிறது.

படத்தின் காப்புரிமை BASHIR KHAN SAFI/AFP/Getty Images
Image caption ஆப்கானிய பாதுகாப்புப் படையினர்

ஆப்கானிஸ்தானின் வடபகுதியில் உள்ள குண்டூஸ் நகரில், மோதல்கள் நகரின் பல்வேறு இடங்களில் நடக்கின்ற போதிலும், நகரின் மையப்பகுதியை அரச படைகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக , குண்டுஸிலுள்ள மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

தெற்கில் உள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில், கான் நிஷின் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகத்தை தாலிபான் படையினர் கைப்பற்றியுள்ளனர். மற்றும் மாகாண தலைநகர் லஷ்கர் காவிற்கு வெளியே குவிந்துள்ளனர்.

தாலிபானின்கள் அந்த இடத்தில் முன்னேறி வருவதை அரச படையினர் எதிர்த்து போரிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

மத்திய மாகாணமான உருஸ்கானின் சில பகுதிகளிலும் தாலிபான்களுக்கும் அரச படைகளுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. .

தொடர்புடைய தலைப்புகள்