பஹாமாஸை கடுமையாக தாக்கும் மேத்யூ சூறாவளி

  • 5 அக்டோபர் 2016

ஒரு தசாப்தத்தில்கரீபியன் பகுதிகளைத் தாக்கிய மிகக் கடுமையான புயல் என்று அறியப்படும் மேத்யூ சூறாவளி பஹாமாஸின் தென் பகுதியில், அதிக காற்று, கன மழை, மற்றும் ஆபத்தான புயலை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை ERIKA SANTELICES/AFP/Getty Images)

அமெரிக்காவில் கடற்கரைப் பகுதிகளில் குடியிருப்போர் அத்தியாவசியப் பொருட்களை கையிருப்பில் சேகரித்து வருகின்றனர்.

இன்று பிற்பகுதியில் மக்களை வெளியேறுமாறு தான் ஆணை பிறப்பிக்கப் போவதாக தென் கரோலினாவின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஹேய்ட்டியை செவ்வாயன்று மேத்யூ சூறாவளி மணிக்கு 230 கிலோமீட்டர் வேகத்தில் மிகக் கடுமையாக தாக்கியது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்திற்குப் பிறகு, பல்லாயிரக்கணக்கான ஹேய்ட்டி மக்கள் கூடாரங்களில் தான் தற்போதும் வாழ்கிறார்கள்.

தகவல் தொடர்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள தென்மேற்கு தீபகற்பப் பகுதியை இணைக்கும் முக்கியமான பாலம் சேதமடைந்துள்ளது. இதனால், அழிவை மதிப்பீடு செய்வதில் சிரமம் உள்ளது. .