பதவி பறிப்பை எதிர்த்து பிரான்ஸ் வலதுசாரி தலைவர் தொடுத்த புதிய வழக்கின் விசாரணை தொடக்கம்

தீவிர வலதுசாரி அரசியல்வாதியான ஷான் மெரி லே பென் ஒரு காலத்தில் வழி நடத்திய கட்சியை எதிர்த்து, தற்போது அவர் தொடுத்துள்ள ஒரு புதிய வழக்கின் மீதான விசாரணையை பிரான்ஸ் நீதிமன்றம் தொடங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை GettyImages-461667620.jpg
Image caption பிரான்ஸ் அரசியல்வாதி ஜீன் மெரி லே பென்

லெ பென் , பிரான்சின் தேசிய முன்னணி கட்சியின் உறுப்பினராக தான் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்ததை எதிர்த்தும், கட்சியின் கட்சியின் பொறுப்பு தலைவர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதற்குக் கட்சி எடுத்த முடிவை எதிர்த்தும் ஏற்கனவே மேல் முறையீடு செய்திருந்தார்.

தனக்குக் கட்சி இழப்பீடாக இரண்டு மில்லியன் டாலர்களை வழங்க வேண்டும் என்று அவர் இந்த வழக்கில் கோரியுள்ளார்.

மரின் லே பென் தனது தந்தையை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கிய பிறகு கருத்தறியும் வாக்குகளில் ஆதரவு பெருகி வருகிறது. மரின் லே பென் அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் இறுதிச் சுற்றை எட்டுவார் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.