மேத்யூ சூறாவளி ஆபத்து, மக்கள் விரைவாக வெளியேற புளோரிடா ஆளுநர் ஆணை

அமெரிக்காவின் புளோரிடா மற்றும் தென் கரோலினா மாகாணங்களில் மேத்யூ சூறாவளி தாக்கும் என்று கணிக்கப்பட்ட இடங்களில் வாழும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கட்டாயமாக வெளியேற வேண்டும் என மாகாண ஆளுநர்கள் ஆணை பிறப்பித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை YAMIL LAGE/AFP/Getty Images)
Image caption மேத்யூ சூறாவளி

கடற்கரை பகுதிகளில் குடியிருப்பவர்கள் வெளியேறுவதால், தென் கரோலினாவில் உள்ள சார்லஸ்டன் நகரத்தின் வெளிப் பகுதிகளில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல்கள் அதிகரித்து வருகின்றன.

புளோரிடா ஆளுநர் ரிக் ஸ்காட் மக்களை முடிந்தவரை விரைவாக வெளியேறுமாறு வலியுறுத்தினார்.

மூன்றாம் நிலை புயல் என்று அளவிடப்பட்டுள்ள மேத்யூ சூறாவளி தற்போது பஹாமாஸ் தீவில் தீவிரமாக தாக்கி வருகிறது. அங்கு மணிக்கு 200 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசுகிறது.

முன்னர் தென் மேற்கு தீபகற்ப பகுதியான ஹேய்ட்டியை மிகக் கடுமையாக தாக்கி பெரும் அழிவை ஏற்படுத்தியது.

தொடர்புடைய தலைப்புகள்