சிரியாவின் அலெப்போ நகர் மீதான தாக்குதல் குறைக்கப்படுவதாக அறிவிப்பு

சிரியாவிலுள்ள அலெப்போ நகரின் கிழக்குப் பகுதி மீதான குண்டுதாக்குதல்கள் குறைக்கப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption அலெப்போ நகர் முற்றாக அழிந்த நிலையில் உள்ளது

அலெப்போ நகரின் கிழக்குப் பகுதி ஐ எஸ் அமைப்பின் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது.

அப்பகுதி மீது கடந்த பல வாரங்களாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறார்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

அலெப்போ மீதான தாக்குதலில் கிடைத்த வெற்றிகளை அடுத்து தாக்குதல் நடவடிக்கைகள் குறைக்கப்படுவதாகக் கூறும் சிரிய இராணுவத்தின் அறிக்கை அரச ஊடகத்தில் ஒலிபரப்பானது.

வான் தாக்குதல்களும் ஷெல் தாக்குதல்களும் குறைக்கப்படுவதால், பொதுமக்கள் விரும்பினால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வழிவகுக்கும் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

அண்மையக் காலத்தில் ரஷ்யாவின் ஆதரவுடன் அந்நகர் மீது சிரியாவின் அரசபடைகள் முன்னெடுத்த தாக்குதலக்ள் பரந்துபட்ட கண்டனங்களுக்கு உள்ளாகியிருந்தன.

அங்கு சிலநாட்கள் மட்டுமே நிலவிய போர் நிறுத்தம் முறிவடைந்த பிறகு அலெப்போ மீதான தாக்குதல்கள் அதிகரித்தன.