மெக்ஸிகோ: பெண்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட கடத்தல் கூட்டத்தின் தலைவர் கைது

இணையத்தில் பெண்களைப் பயன்படுத்தி, மற்றவர்களை கவர்ந்து சிக்கவைத்த, கடத்தல் கூட்டத்தின் தலைவரை கைது செய்துள்ளதாக மெக்ஸிகோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

மெக்ஸிகோவின் கிழக்கு மாகாணமான வெரகுரூஸில் உள்ள குவாட்ஸ்குவால்கோஸ் என்ற பகுதியில் கடத்தல் கூட்டத்தின் தலைவரும் மற்றும் அந்த குழுவை சேர்ந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த குழுவானது 12 கடத்தல் சம்பவங்களில் தொடர்புள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், பணயத்தொகையை பெற்ற பிறகும் தங்களுடைய பணயக் கைதிகளை அடிக்கடி கொன்றுள்ளதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக கடத்தல் மற்றும் போதை வன்முறை சம்பவங்களால் வெரகுரூஸ் சிக்கி தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்