கென்ய எல்லையில் அல்-ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் 6 பேர் பலி

கென்யா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மண்டேரா மாகாணத்தில், குடியிருப்பு வளாகம் ஒன்றில் இஸ்லாமியவாத தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இந்த அதிகாலை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சோமாலிய தீவிரவாதிகள் குழுவான அல்-ஷபாப் தான் என்பதில் சந்தேகமே இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளார் மாகாண ஆளுநர் அலி ரோபா.

பாதுகாப்பு படையினரின் உடனடி நடவடிக்கை மேலும் பல உயிரிழப்புகளை தடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கொல்லப்பட்டார்களா என்பது உடனடியாக தெரியவில்லை.

மண்டேராவில் அல்-ஷபாப் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

எல்லைப்பகுதியின் இரு பக்கத்திலும் பாரம்பரிய சோமலியர்களே ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்