உள்ளாடையில் மலேசியா கொடி விவகாரம்: 9 ஆஸ்திரேலியர்கள் விடுதலை

  • 6 அக்டோபர் 2016

மலேசியாவில் நடைபெற்ற ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரி போட்டியின் போது, தங்கள் உள்ளாடை வரை கழட்டி காட்டியதற்காக கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த 9 வாலிபர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மலேசியாவில் நடைபெற்ற ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியின் போது

தங்கள் நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய பின்னர் அவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஃபார்முலா போட்டியில் தங்கள் நாட்டை சேர்ந்த டேனியல் ரிக்கார்டோ வெற்றி பெற்றதை தொடர்ந்து அதை கொண்டாடும் வகையில் அவர்கள் தங்கள் ஆடைகளை கழட்டி உள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மலேசியாவில் நடைபெற்ற ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியின் போது

ஒவ்வொரு ஆடையையும் அவர்கள் கழற்றிய நிலையில், இறுதியாக மிச்சமிருந்த உள்ளாடையில் மலேசியாவின் கொடியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption விடுவிக்கப்பட்ட ஆஸ்திரேலியர்கள்

இதில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுக்க, இந்த சம்பவம் மலேசியாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்