தாய்லாந்தில், 40 ஆண்டுகளுக்கு முன் மாணவர்கள் படுகொலை சம்பவ துக்க தினம் அனுசரிப்பு

40 ஆண்டுகளுக்கு முன்பு, பாதுகாப்புப் படைகள் மற்றும் தீவிர வலதுசாரி ஆயுதக்குழுக்களால், நிராயுதபாணியான மாணவ போராட்டக்காரர்கள் படுகொலை செய்யப்பட்ட தினத்தைக் குறிக்க தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் துக்கம் அனுசரிப்போர் மற்றும் ஆர்வலர்கள் கூடினர்.

தம்மாசட் பல்கலைக்கழகத்தில் 1976ல் நடந்த அடக்குமுறையின்போது, 46 கொல்லப்பட்டனர் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பக்கசார்பற்ற தகவல்களின்படி, இறந்தவர்களின், மொத்த எண்ணிக்கை 100க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை LILLIAN SUWANRUMPHA/AFP/Getty Images)
Image caption 40 ஆண்டுகளுக்கு முன் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தம்மாசட் பல்கலைக்கழகத்தில் துக்க தினம் அனுசரிப்பு

இந்தப் படுகொலை, தாய்லாந்தில் ஜனநாயக ஆட்சியைச் சிறிது காலத்திற்கு முடிவுக்குக் கொண்டுவந்தது. இந்தச் சம்பவம் நடந்த அன்றே, நாட்டைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த ராணுவத்தினர் இது குறித்த விசாரணைகளை மேற்கொள்ள மறுத்துவிட்டனர்.

தொடர்புடைய தலைப்புகள்