வங்கதேசம்: கடும் பாதுகாப்பு கெடுபிடிக்கு மத்தியில் கிரிக்கெட்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வங்கதேசம்: பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் போட்டிகள் நாளை வெள்ளிக்கிழமை (07-10-2016) வங்கதேசத்தில் துவங்கவுள்ள நிலையில் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வங்கதேசத்தில் பாதுகாப்பு குறித்த கவலை காரணமாக இங்கிலாந்து அணியின் இரண்டு ஆட்டக்காரர்கள் இதிலிருந்து விலகிவிட்டனர்.

வங்கதேசத்தில் சென்ற மூன்று ஆண்டுகளில் நாற்பது பேர் இஸ்லாமியவாத ஆயுததாரிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.

மூன்று மாதங்களுக்கு முன் உணவு விடுதி மீதான தாக்குதலில் இருபது வெளிநாட்டவர் கொல்லப்பட்டனர்.

வங்கதேசத்தில் அதிகரித்துவரும் இஸ்லாமியவாத பயங்கரவாத தாக்குதலை எதிர்கொள்ள அந்நாட்டு அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்த பிபிசியின் செய்தித்தொகுப்பு.