வெனிசுவேலா அதிபரைப் பதவி விலகக் கட்டாயப்படுத்த முடியும் : எதிர்க்கட்சி தலைவர்

  • 7 அக்டோபர் 2016

வெனிசுவேலா எதிர்க்கட்சி தலைவர் ஹென்ரிக் கேப்ரீலெஸ் தன்னால் உறுதியாக அதிபர் நிக்கோலஸ் மதுரோவை பதவி விலகச் செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை FEDERICO PARRA/AFP/Getty Images)
Image caption வெனிசுவேலா அரசாங்கத்தின் எதிர்க்கட்சி தலைவர் ஹென்ரிக் கேப்ரீலெஸ் (கோப்புப்படம்)

வெனிசுவேலா வறுமையால் பீடிக்கப்பட்டுள்ளது என்றும், மக்கள் தொகையில் எண்பது சதவீதம் பேர் மாற்றத்தை விரும்புவதாகவும் அவர் கூறினார்.

மேலும், தன்னால் நான்கு மில்லியன் கையெழுத்துக்களைப் பெற்று, ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்த வைக்க முடியும் என்றும் ஹென்ரிக் கேப்ரீலெஸ் பிபிசியிடம் கூறினார்

வெனிசுவேலாவின் ஏற்றுமதி வருவாயில் பெரும்பகுதி எண்ணெய் வளத்தைத் தான் நம்பியுள்ளது.

ஆனால் சரிந்துவரும் எண்ணெய் விலை மற்றும் நாட்டின் பொருளாதார நிர்வாக சீர்கேடும் இணைந்து, வெனிசுவேலாவில் பொருளாதார சரிவை ஏற்படுத்தியுள்ளன.