கொலம்பிய அதிபர் யுவான் மானுவெல் சாண்டோசுக்கு அமைதிக்கான நோபல் பரிசு
கொலம்பிய அதிபர் யுவான் மானுவெல் சாண்டோசுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது..
நான்கு ஆண்டுகளாக ஃபார்க் போராளிகளுடன் ( FARC- Revolutionary Armed Forces of Colombia) நடத்திய அமைதி பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அவர் கையெழுத்திட்ட அமைதி ஒப்பந்தத்திற்காக நார்வே நீதிபதிகள் அவரைப் பாராட்டினர்.
ஆனால், கடந்த வாரம் நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பில் கொலம்பிய மக்களால் அந்த ஒப்பந்தம் நிராகரிப்பட்டது.
52 ஆண்டுகளாக நடந்த மோதல்களில் 2.6 லட்சம் பேருக்கு மேல் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு மில்லியன் மேற்பட்ட மக்கள் உள்நாட்டிலேயே இடம் பெயர நேரிட்டது.