சிரியாவில் நிரந்தர ராணுவ தளம் அமைக்கும் ரஷ்யா

ரஷ்ய ராணுவம் சிரியாவில் நிரந்தராமாக தங்கியிருக்கும் ஒப்பந்தத்துக்கு ரஷ்ய நாடாளுமன்ற கீழவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption சமீபத்திய மோதல்களில் ரஷ்யாவின் ஈடுபாடு அதிகரிப்பு. படம் - க்ரைமியாவில் கடற்படை ராணுவ பயிற்சி

ஓராண்டுக்கு முன்னால் சிரியாவின் அதிபர் அசாத்துக்கு ஆதரவாக போரில் ரஷ்யா தலையிட தொடங்கிய போது, சிரியாவில் தாற்காலிகமாக ஹெர்மெய்மீம் என்ற இடத்தில் விமானத் தளம் அமைக்கப்பட்டது.

சிரியாவில் நீண்டகால திட்டங்களை ரஷ்யா கொண்டுள்ளதை மேற்குலகிற்கு தெரிவிக்கின்ற சமிக்ஞையாக இந்த முடிவு உள்ளது என்று மாஸ்கோவிலுள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் எல்லைக்கு வெளியே பிற இடங்களில் ராணுவ நிலைகளை நிறுவுவதையும், ரஷ்யா கருத்தில் கொண்டுள்ளதாக துணை பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

வியட்நாம் மற்றும் கியூபாவில் மீண்டும் ராணுவ தளங்களை நிறுவும் திட்டங்கள் உள்ளதா என்று கேள்வி கேட்கப்பட்டபோது, அது தொடர்பாக பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

தொடர்புடைய தலைப்புகள்