இணைய வழித் தாக்குதல் : ரஷியாவும் அமெரிக்காவும் அடுக்கும் குற்றச்சாட்டுகள்

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையூறு விளைவிப்பதை நோக்கமாகக் கொண்டு நடந்த தொடர் இணைய வழி தாக்குதலுக்கு ரஷியா தான் பொறுப்பு என்று அமெரிக்க அரசாங்கம் வைத்துள்ள குற்றச்சாட்டுகளை ரஷியா மறுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரஷியாவின் மிக மூத்த அதிகாரிகளின் அனுமதியோடு தான் இணைய வழி தாக்குதல்கள் நடந்திருக்க முடியும் என்று அமெரிக்கா கூறுகிறது

ரஷியாவின் செய்தி தொடர்பாளர் ஒருவர் இந்தக் குற்றச்சாட்டுகள் அபத்தமானவை என்று கூறியுள்ளார்.

அமெரிக்க பகுதிகளில் இருந்து தினமும் ரஷிய அதிபர் புதினின் இணையதளம் தாக்கப்படுகிறது. ஆனால் ரஷியா எப்போதும் அமெரிக்க அதிபர் அலுவலகம் மீது எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை என்றார்.

முன்னதாக, ஒபாமா நிர்வாகம், ஜனநாயக கட்சியின் கணினிகள் மீதான தாக்குதல்களின் அளவை வைத்துப் பார்க்கும்போது , அது ரஷியாவின் மிக மூத்த அதிகாரிகளின் அனுமதியோடு தான் நடந்திருக்க முடியும் என்று கூறியிருந்தது.