ஹேய்ட்டி மீது சூறாவளியின் முழு தாக்கம் தெரிய பல நாட்கள் ஆகலாம்: ஐ.நா எச்சரிக்கை

ஹேய்ட்டி மீது மேத்யூ சூறாவளியின் தாக்கம் குறித்து தகவல்கள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை HECTOR RETAMAL/AFP/Getty Images
Image caption ஹேய்ட்டியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

செவ்வாயன்று ஹெய்ட்டியைத் தாக்கிய சூறாவளியால் கிட்டத்தட்ட 900 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று இப்போது தெரியவந்துள்ளது என்று அங்குள்ள் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிபிசியிடம் பேசிய உலக உணவுத் திட்டத்தைச் சேர்ந்த கார்லோஸ் வேலோசா, சில உதவிப்பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் ஆனால் அப்பிராந்தியத்தில், பல இடங்களில் போக்குவரத்துக்கு துண்டிக்கப்பட்டுள்ளதால், பெரும்பால இடங்களைக் கடல் வழியாக அல்லது ஹெலிகாப்டர் மூலம் தான் அணுக முடிகிறது என்றார்.

புயலுக்குப் பின், ஹெய்ட்டிக்கு தேவையான உதவிகளைச் செய்ய அமெரிக்க கடற்படை உதவிகளைத் திரட்டி வருவதாகத் தெரிவித்துள்ளது