சிரியா மீதான இரண்டு போட்டி தீர்மானங்கள் மீது ஐ.நா. வாக்களிக்கும் என எதிர்பார்ப்பு

சிரியா மீதான இரண்டு போட்டி தீர்மானங்கள் மீது இன்று பின்னதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை THAER MOHAMMED/AFP/Getty Images
Image caption போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியவின் அலெப்போ நகரம்

முற்றுகையிடப்பட்டுள்ள அலெப்போ நகரத்தில் போர் நிறுத்தத்துக்காக பிரான்ஸ் வகுத்துள்ள திட்டத்தை தான் நிராகரிப்பாதாக ரஷியா சுட்டிக் காட்டியுள்ளது.

ரஷியா மற்றும் சிரிய அரச படைகளின் விமானங்கள் அலெப்போ நகரம் மீது பறப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் வகுத்த திட்டம் கூறுகிறது.

ரஷியா ஒரு திட்டத்தை சமர்ப்பித்துள்ளது.

அந்தத் திட்டத்தில், குண்டுத்தாக்குதல்கள் நிறுத்தப்படுவது பற்றி குறிப்பிடவில்லை.

ஐ.நா. சபையில் ரஷியாவின் தூதர் பிரான்ஸின் திட்டம் ஒரு ஒரு ராஜதந்திர காய்நகர்த்தல் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஐ.நா.சபையில் பிரிட்டனின் தூதர், ரஷியா முன் வைத்துள்ள திட்டம் ஒரு அரசியல் சூழ்ச்சி என்று கூறியுள்ளார்.