வங்கதேசத்தில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட 11 பேர் சுட்டுக் கொலை

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

வங்கதேசத்தில் நடைபெற்ற தொடர் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட 11 பேரை கொன்றுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் டாக்கா அருகே இரு மோதல்களும், அங்கிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள டாங்கெயில் என்ற மாவட்டத்தில் ஒரு மோதலும் நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர்.

போலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து மூன்று பதுங்கு இடங்களில் சோதனை நடத்தினர்.

ஒவ்வொரு இடத்திலும் பல மணிநேரம் கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

தடை செய்யப்பட்ட இஸ்லாமியவாத குழுவான ஜமாத்-உல்-முஜாஹதீனின் டாக்கா தாலைவரும் கொல்லப்பட்டதாக வங்கதேசத்தின் உள்துறை அமைச்சர் அசாத் உஸ்மான் கான் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் டாக்காவின் தூதரக பகுதி அருகே இருந்த கஃபேவில் மிக மோசமான தாக்குதல் நடைபெற்றதை தொடர்ந்து, தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்களின் பதுங்கிடங்களை குறிவைத்து போலிசார் ஏராளமான சோதனைகளை நடத்தி வருகின்றனர்.