ஏமனில் மீண்டும் காலரா நோய்: ஐ.நா தொண்டு நிறுவனம்

ஏமனில் காலரா நோய் திடிரென பரவியிருப்பதாக ஐக்கிய நாடுகளின் உதவி அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஏமன் தலைநகர் சனாவில் பல நோயாளிகளுக்கு காலரா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பலர் தெற்கு நகரமான தையீஸில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

18 மாதங்களுக்கும் மேலாக நடந்த உள்நாட்டு போர் காரணமாக நாடு முழுக்க சுகாதார வசதிகள் தரம் இழந்துள்ளன.

மேலும், அங்கு நிலவும் குடிநீர் தட்டுப்பாடு சுகாதார நிலைமையை மேலும் மோசமாக்கி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற சண்டையில், அரசு தரப்பை சேர்ந்த மூத்த தளபதி அப்தெல்-ரல் அல்-ஷடாதியை ஹூதியை போராளிகள் கொன்றுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்