"பிரிட்டன் வெளியேறுவது தொடர்பில் வெளிநாட்டவர் ஆலோசனைக்கு அனுமதியில்லை"

பிட்டனின் முன்னிலை பல்கலைக்கழகங்களில் ஒன்றான லண்டன் பொருளாதார பல்கலைக்கழகத்தின் சில கல்வியாளர்கள் பிரிட்டனை சேர்ந்தவர்களாக இல்லாமல் இருப்பதால், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது தொடர்பாக அவர்கள் இனிமேல் ஆலோசனை வழங்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அரசால் கூறப்பட்டுள்ளதாக அந்த பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கடவுச்சீட்டு வைத்திருப்போர் மட்டுமே ஆலோசனை வழங்கலாம்

அவரவர்களுக்கு பயன்படுகின்ற அம்சங்களில் முரண்பாடு நிலவ சாத்தியக்கூறு இருப்பதால், பிரிட்டன் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வைத்திருப்பவர்கள் மட்டுமே தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் போன்ற பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்று இந்த பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்தோர் உள்பட ஒரு சிறிய கல்வியாளர் குழு அரசுக்கு இதுவரை ஆலோசனை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஒரு தவறான புரிதல் தேவைக்கு அதிகமாக மிகைப்படுத்தப் பட்டிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்