ஸ்திரத்தன்மையை சோதிக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஜார்ஜியா மக்கள் வாக்களிப்பு

முன்னாள் சோவியத் குடியரசின் ஸ்திரத்தன்மையை சோதிப்பதாக பார்க்கப்படும் நாடாளுமன்ற தேர்தல்களில் ஜார்ஜியா மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

Image caption வறுமை, வேலையின்மை, கடன் ஆகியவற்றால் வாக்காளர்கள் கவலையடைந்துள்ளனர்

நாடாளுமன்ற தொகுதிகளுக்காக 20-க்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் போட்டியிட்டாலும், முக்கிய போட்டி ஆளும் ஜார்ஜிய கனவு கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய இயக்கத்திற்கும் இடையே நிலவுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை AP
Image caption சோவியத்துக்கு பிறகு பல கட்சிகளை கொண்ட ஜனநாயக முறையில் வெற்றி வரலாற்றை உடைய நாடாக ஜார்ஜியா திகழ்கிறது

இருப்பினும், பல வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்று இன்னும் முடிவு செய்யாமல் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருக்கின்றன.

வறுமை, வேலையின்மை, கடன் ஆகியவற்றால் கவலையடைந்துள்ள வாக்காளர்கள் தேர்தலால் சோர்வடைந்திருப்பதாக பிலிசியில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்