ஒருவரையொருவர் காப்பாற்றிய குடும்பமும் குண்டுக் கரிச்சானும்

Penguin sitting on someone's head படத்தின் காப்புரிமை Cameron Bloom

இந்த கதை குருவிக்கூட்டை விட்டு கீழே விழுந்ததால், ஒரு குருவிக்கும் ஒரு குடும்பத்திற்கும் இடையே மலர்ந்த உறவைப் பற்றி விவரிக்கிறது.

ஒரு நாள் வீசிய பலமான காற்று குண்டுக் கரிச்சான் குருவிக்குஞ்சு ஒன்று கூட்டை விட்டு கீழே விழச் செய்தது. நோவா என்கிற சிறுவன் அதை கண்டெடுக்கும் வரை அது அங்கேயே கிடந்தது.

படத்தின் காப்புரிமை Cameron Bloom

அதனை எடுத்த நோவா, துணியில் சுற்றி தன்னுடைய தாய் சேமிடம் கொடுத்தார். அவர் அதனை தன்னுடைய மடியில் வைத்து கொண்டு காரை நோக்கி சக்கர நாற்காலியை உருட்டி சென்றார்.

படத்தின் காப்புரிமை Cameron Bloom

வீட்டில், குருவியை வெப்பமாக இருக்கும் வகையில் துணியில் சுற்றி பாதுகாத்தனர். உறுதியற்ற தலையை கொண்டிருந்த அந்த குண்டுக் கரிச்சானின் குருவியின் ஒரு பக்க இறகு தொங்கி கொண்டிருந்தது, அது குஞ்சிப் பொரித்து இரண்டு வாரங்களே ஆகியிருந்தது.

படத்தின் காப்புரிமை Cameron Bloom

இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை அதற்கு உணவு ஊட்ட வேண்டும். இல்லாவிட்டால் அது உயிர் பிழைக்காது என்று கால்நடை மருத்துவர் ஆலோசனை அளித்தார். புளூமின் குடும்பம் அந்த சிறிய குருவியின் உயிரை காப்பாற்ற தீர்மானித்தது.

படத்தின் காப்புரிமை Cameron Bloom

அதனுடைய கறுப்பு மற்றும் வெள்ளை நிற இறகுகளும், பெரிய பாதங்களும் பென்குயினை நினைவூட்டியதால், அதனை பென்குயின் என்றே பெயரிட்டு அழைத்தனர்.

படத்தின் காப்புரிமை Cameron Bloom

பென்குயினை தத்தெடுத்து கொண்ட இந்த குடும்பம் உயிர் பிழைத்து கொள்வதை பற்றிய அனுபவத்தை பெற்றிருந்தனர். சில மாதங்களுக்கு முன்னதாக, சேம் கூரையிலிருந்து விழுந்து முதுகு உடைந்துவிட்டது. அவரால் நடக்க முடியாமல் போராடினார். ஓடவும், நீர் சறுக்கவும் முடியாததால், அவர் கோபமாகவும், மன அழுத்தத்துடனும் காணப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Cameron Bloom

சேமின் மடியிலும், தோள் பட்டையிலும் உட்கார்ந்து இருப்பதை பென்குயின் விரும்பியது. அந்த துணையை விரும்பிய சேமும் தன்னுடைய மன அழுத்தங்களை அதன் மூலம் தீர்த்து கொண்டார்.

”நான் அதனிடம் பேசுவேன். புகார் தெரிவிப்பேன். நான் எப்படி இருந்தேன் என்று கூறுவேன். பென்குயினுக்கு அனைத்தும் தெரியும்” என்கிறார் சேம்.

படத்தின் காப்புரிமை Cameron Bloom

பென்குயின் வீட்டை சுற்றி சுதந்திரமாக பறந்து பையன்களின் படுக்கைகளில் தூங்கியது. அது பிடித்து விளையாட சிறிய குச்சிகளை அவர்கள் எறிவர். சிலவேளையில் அது குருவி என்பதை விட நாய் போல விளையாடியது.

இந்த குண்டுக் கரிச்சான் குருவியின் செயல்பாடுகளை தந்தை கேமரன் புகைப்படம் எடுக்கத் தொடங்கினார்.

படத்தின் காப்புரிமை Cameron Bloom

பென்குயின் கழிவறை செல்வதற்கு மட்டும் பழக்கப்படவில்லை. அது வலிமையாக வளர தொடங்கியதும், அதை வெளியே பறந்து சுற்றிவர ஊக்கமூட்டினர். படிப்படியாக அது பறந்து சென்றது. திரும்பி வரவேயில்லை.

படத்தின் காப்புரிமை Cameron Bloom

புளூமின் குடும்பம் பென்குயின் போய்விட்டதை மிகவும் உணர்கிறார்கள். அவர்கள் ஒருவொருக்கொருவர் இனி யாரும் தேவையும் இல்லை. அது பென்குயினுக்கு சிறகடித்து பறக்க வேண்டிய தருணம்.

சேமுக்கும் புதிய சுதந்திரம் கிடைத்துவிட்டது. அவர் படகோட்டுவதற்கு தொடங்கிவிட்டார்.

அந்த குண்டுக் கரி்ச்சான் குருவியை அவர்கள் காப்பாற்றியதை போல அது அவர்களையும் காப்பாற்றி விட்டது என கேமரன் எண்ணுகிறார்.

படத்தின் காப்புரிமை Cameron Bloom

தொடர்புடைய தலைப்புகள்