பெண்களை பற்றிய தவறான கருத்து: மன்னிப்பு கேட்டார் டிரம்ப்

  • 8 அக்டோபர் 2016

பெண்கள் குறித்து மோசமான கருத்துக்களை 11 ஆண்டுகளுக்கு முன்பு தான் தெரிவித்ததாக வெளியாகி இருக்கும் காணொளிக்கு பிறகு, அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசுக் கட்சியின் வேட்பாளர், டொனால்டு டிரம்ப் மன்னிப்பு கோரியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption டிரம்ப் அரசியலில் நுழைவதற்கு முன்னர், 11 ஆண்டுகளுக்கு முன் இந்த காணொளி பதிவு எடுக்கப்பட்டது

பதிவு செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் இந்த காணொளி பதிவில், பெண்களை பற்றிய இந்த கருத்துக்களை தெரிவித்ததில் தான் தவறிழைத்திருப்பதாக தெரிவித்து, நல்ல மனிதராக வாழ்வதாக உறுதியும் அளித்திருக்கிறார்.

ஆனால், இந்த காணொளி அமெரிக்கா எதிர்கொள்கின்ற முக்கிய பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதைவிட வேறேதும் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

பென்களை துஷ்பிரயோகம் செய்ததாக பில் கிளிண்டன் மீது பழிசுமத்திய டிரம்ப், தன்னுடைய கணவரால் பாதிக்கப்பட்டோரை ஹிலரி கொடுமைப்படுத்தி, வெட்கத்திற்கு உள்ளாக்கியவர் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

2005 ஆம் பதிவு செய்யப்பட்ட இந்த காணொளியில், பெண்களிடம் தான் மோசமாகத் நடந்துகொண்டது மற்றும் உடலுறவு கொள்ள முயன்றது பற்றி தற்பெருமையுடன் டிரம்ப் பேசியுள்ளார். ஒரு நட்சத்திரமாக இருக்கின்றபோது, நீ எதையும் செய்யலாம் என்கிறார்.

இதனை பார்த்து கவலையடைவதாக தெரிவித்திருக்கும் சபாநாயகர் பால் ரையான் உட்பட, மூத்த குடியரசுக் கட்சித் தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறுகின்ற அதிபர் வேட்பாளர்களின் தொலைக்காட்சி விவாதத்திற்கு முன்னதாக, டிரம்பின் பரப்புரையில் சிக்கலான தருணம் என்று இதனை ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்