ஐ.எஸ் அமைப்பினரின் ஆதிக்கம் குறைந்து வருகிறது: ஆய்வில் தகவல்

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பு, ஒரு காலத்தில் தனது கட்டுப்பட்டிற்குள் வைத்திருந்த பகுதியில் கால் பகுதிக்கும் மேலானதை தற்போது இழந்துள்ளதாக, முன்னணி பாதுகாப்பு ஆய்வாளர்கள் அடங்கிய குழு ஒன்று நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம், உச்சக்கட்டத்தில் இருந்த இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள், தற்போது 28 சதவீதம் சுருங்கிவிட்டதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ் அமைப்பினரின் தற்போதைய கட்டுப்பாட்டில் இலங்கை அளவுக்கு உள்ள நிலப்பரப்பு இருக்கிறது.

மூன்று மாதங்களிலிருந்து தற்போதைய அக்டோபர் மாதம் வரை, தீவிரவாதிகளின் இழப்புகள் குறைந்துள்ள போதும், துருக்கிய எல்லை அருகில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், சிரிய நகரான மன்பிஜ் , இராக் நகரான மொசூலின் தெற்கு பகுதியில் உள்ள முக்கிய விமானதளம் ஆகியவை அவர்கள் இழந்த பகுதிகளில் அடங்கும்.