ஆப்ரிக்கர்களின் நலனில் ஜெர்மனி அக்கறை கொண்டுள்ளது: ஏங்கலா மெர்கல்

ஆப்ரிகர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதில் ஜெர்மனி ஆர்வம் கொண்டுள்ளது என்று கூறியுள்ள ஜெர்மன் சான்செலர் ஏங்கலா மெர்கல், தனது மூன்று ஆப்ரிக்க நாடுகளின் பயணத்தை தொடங்கியுள்ளார்.

மெர்கல்

பட மூலாதாரம், AFP

ஆப்ரிக்க நாடுகளான மாலி, நீஜெர், எத்தியோபியா ஆகியவற்றிற்கு விஜயம் செய்யவுள்ள மெர்கல், அங்கு ஸ்திரதன்மை மற்றும் வளமையை அதிகரிப்பது, ஐரோப்பாவிற்கு தப்பி செல்ல விரும்புவோரின் எண்ணிக்கையைக் குறைக்கும் என தெரிவித்துள்ளார்; மேலும் அகதிகள் குறித்த நெருக்கடியை அது தளர்த்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆப்ரிக்காவில் ஜிகாதிகளுக்கு எதிரான சண்டை குறித்தும் மெர்கல் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஜெர்மனியில் ஐ.நா., நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜெர்மானியப் படைகள் மாலி மற்றும் நைஜரில் நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.