மாலியில் கண்ணிவெடி குண்டு தாக்குதலில் முன்னாள் கிளர்ச்சியாளர் பலி

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வெடித்துச் சிதறியுள்ள ஷேக் அக் அவுசாவின் வாகனம்

மாலியின் முன்னாள் கிளர்ச்சி இயக்கமான டுவாரெக்கின் தலைவர், ஷேக் அக் அவுசா கண்ணிவெடி குண்டு வெடித்து உயிரிழந்துள்ளார்.

மினுஸ்மா என்னும் ஐ.நாவின் அமைதிகாக்கும் நடவடிக்கையின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று திரும்பிக் கொண்டிருந்த போது, அவரின் வாகனம் மாலியின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் கிடல் நகரில் வெடித்துச் சிதறியது.

ஷேக் அக் அவுசா, நான்கு வருடங்களுக்கு முன் சக்திவாய்ந்த இஸ்லாமியவாத தீவிரவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து மாலி அரசிற்கு எதிராக நீண்ட நாட்கள் நடைபெற்ற டுவாரெக் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

கூட்டணி தடுமாற்ற நிலைக்கு வந்த போது டுவாரெக் கிளர்ச்சியை முடித்து கொண்டனர் மேலும் ஃபிரான்ஸ் படைகள் இஸ்லாமியவாத தீவிரவாதிகளை விரட்டுவதற்கு தலையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.