ஃபிரான்ஸில் கண்ணை மூடிக்கொண்டு ஒயினை ருசிக்கும் போட்டி: சீன அணி வெற்றி

ஃபிரான்ஸில் நடைபெற்ற ஒயினை ருசிக்கும் பெருமைமிக்க போட்டி ஒன்றில் சீனாவைச் சேர்ந்த நிபுணர்கள் குழு வெற்றி பெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

கண்களை மூடிய நிலையில், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒயினின் உருவாக்கம், பயன்படுத்தியுள்ள திராட்சையின் வகைகள், தயார் செய்யப்பட்ட காலம் மற்றும் தயார் செய்யப்பட்ட இடம் ஆகியவற்றை அவர்கள் சரியாகக் கண்டறிந்தனர்.

அந்த போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள், சீன அணியினரின் ஆச்சரியமிக்க வெற்றி, அதிர்ச்சியுடன் கூடிய மகிழ்ச்சியாக ஒயின் துறையில் கருதப்படும் என விவரித்துள்ளனர்.

பெல்ஜியம் மற்றும் ஸ்பெயினின் முன்னாள் வெற்றியாளர்கள் உட்பட இருபது குழுக்களை அவர்கள் தோற்கடித்துள்ளனர்.

சீனப் பொருளாதாரம் மேம்பட்டு, சீனர்களின் வருவாய் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய ஒயின் உற்பத்தியாளர்கள் மற்றும் அதிகபடியாக ஒயின் உட்கொள்ளப்படும் நாடாக சீனா மாறியுள்ளது.