ஆஃப்கனின் குண்டூஸ் நகரில் அரசு படை - தாலிபன் இடையே தொடரும் மோதல்

வட ஆஃப்கன் நகரமான குண்டூஸில் அரசு படையினர் மற்றும் தாலிபன் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

மாகாண தலைநகருக்குள் தீவிரவாதிகள் நுழைந்து ஒரு வாரத்திற்கு பின் இந்த மோதல் நடந்து வருகிறது.

பெரும்பாலான பகுதிகள் அரசு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆனால், சில வடக்கு மற்றும் வட கிழக்கு மாவட்டங்களில் சண்டை நடைபெற்று வருகிறது.

பல நாட்களாக குண்டூஸ் நகரில் அடிக்கடி மின் வெட்டு நிலவி வருகிறது. மேலும், உணவு மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஆயிரக்கணக்கான மக்கள் குண்டூஸை விட்டு வெளியேறி உள்ளனர்.

கடந்த வாரம் நிகழ்ந்த சண்டையில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை.

மேலும், குடிபெயர்ந்து சென்ற குடும்பங்கள் நலமாக இருக்கிறார்களா என்ற கவலை தற்போது அதிகாரித்து வருகிறது.

தொடர்புடைய தலைப்புகள்