மொசூலில் இருந்து ஐ.எஸ் அமைப்பினரை விரட்டியடிக்கும் போரில் பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுரை

இராக்கில் ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள மிக முக்கிய பகுதியான மொசூலிலிருந்து ஐ.எஸ் போராளிகளை வெளியே துரத்த நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த தாக்குதலுக்கு முன்னதாக அங்கு வசிக்கும் மக்களுக்கு நீண்ட அறிவுறுத்தல்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

போர் நடவடிக்கையின் போது காயமடையும் அல்லது கொல்லப்படும் வாய்ப்புகளை குறைப்பது எப்படி என்பதைக்கூறும் 32 அம்சங்கள் கொண்ட பட்டியல் ஒன்று பொதுமக்களுக்கு விளக்குகிறது.

வீட்டின் ஜன்னல் பகுதிகளிலிருந்து ஒதுங்கியிருக்கும்படியும், அவசர தேவையின்றி கார் ஓட்டுவதை தவிர்க்க கோரியும் மற்றும் வான்வழித்தாக்குதல் நடைபெறும் போது குறைந்தது அரை மணி நேரத்திற்கு வீதிகளில் கூட்டம் கூட வேண்டாம் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்