சீன முன்னாள் கம்யூனிஸ்ட் அதிகாரிக்கு ஊழல் குற்றச்சாட்டில் இடைநிறுத்தப்பட்ட மரண தண்டனை

ஊழல் புரிந்துள்ளதாக கண்டறிந்த பின்னர், முன்னாள்கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரி ஒருவருக்கு சீன நீதிமன்றம் இடைநிறுத்தப்பட்ட மரண தண்டனை வழங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை anyangintermediatecourtchina
Image caption கையூட்டு பெற்றதன் மூலம், 35 மில்லியன் டாலர் சொத்துக்களை சேர்த்திருப்பதாக பாய் என்பெய் மீது குற்றச்சாட்டு

சீனாவின் தென் மேற்கிலுள்ள யுன்னான் மாகாண கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்தான் பாய் என்பெய்.

பெரும்பாலும் கட்டுமானம் மற்றும் சுரங்க ஒப்பந்தங்கள் தொடர்பாக கையூட்டு பெற்றதன் மூலம், 35 மில்லியன் டாலர் சொத்துக்களை அவர் சேர்த்திருப்பதாக குற்றம் காணப்பட்டுள்ளார்.

பொதுவாக ஆயுள் தண்டனையாக மாற்றம் பெறுகின்ற, இரண்டு ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட மரண தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில், பல இலட்சக்கணக்கான சீன அதிகாரிகள் ஊழலுக்காக தண்டிக்கப்பட்டுள்ளனர்.

என்றாலும், இதில் இலக்கு வைக்கப்பட்டவர்கள் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அரசியல் போட்டியாளர்கள் என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்