ஜெருசலேம் காவல்துறை தலைமையகத்திற்கு அருகில் துப்பாக்கிக்சூடு

ஜெருசலேமிலுள்ள காவல்துறை தலைமையகத்திற்கு அருகில் துப்பாக்கிக்சூடு நடைபெற்றுள்ளதாக இஸ்ரேல் போலிஸ் தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption காயமடைந்த பெண்ணொருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். (படத்தில் ஜெருசலேம் - கோப்புப்படம்)

இதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தோரில் பெண்ணொருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

தாக்குதல்தாரி ஒரு காரில் இருந்து கொண்டு துப்பாக்கி பிரயோகம் நடத்திருப்பதாக போலிஸ் கூறியுள்ளது.

போலிஸாரின் பதில் தாக்குதலில் தாக்குதல்தாரி கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்