பாக்தாத்தில் ஷியா புனிதப் பயணிகளின் கூடாரம் மீது தாக்குதல், 3 பேர் பலி

இராக்கின் தலைநகர் பாக்தாத்தில், ஷியா புனிதப் பயணிகள் ஒன்றுகூடிய கூடாரம் ஒன்றின்மீது குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AP

அதில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலை தாங்களே நடத்தியதாக தெரிவித்திருக்கும் இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிக்கொள்ளும் குழுவினர், மேலும் அதிகம் பேர் பலியானதாக கூறியிருக்கின்றனர்.

இராக்கில் ஐ.எஸ் குழுவினர் வைத்திருந்த பகுதியில் தங்களுடைய கட்டுப்பாட்டை இந்த ஆண்டு இழந்து வரும் நிலையில், பாக்தாத்தில் அதிக குண்டு தாக்குதலை அவர்கள் நடத்தியுள்ளனர்.

பாக்தாத்தின் மேற்கு பகுதியில் இருக்கும் ஃபலூஜாவை இராக்கின் படைப்பிரிவுகள் மீண்டும் கைபற்றியதன் மூலம் இது போன்ற தாக்குதல்களை தடுக்கலாம் என்று இராக் அரசு நம்பியது.

ஆனால், இந்த நம்பிக்கை இதுவரை நிறைவேறாமல் குண்டு தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

தொடர்புடைய தலைப்புகள்