அமெரிக்காவிலும் அழிவை ஏற்படுத்திய மேத்யூ சூறாவளி

  • 9 அக்டோபர் 2016

அமெரிக்காவின் தென் கிழக்கில் மேத்யூ சூறாவளியால் பலியானோரின் எண்ணிக்கை 15 -ஆக உயர்ந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption தெற்கு கரோலினாவில் சார்லஸ்டன் பகுதிகளில் கணிசமான வெள்ளப்பெருக்கு

பெரியதொரு வெள்ளப்பெருக்கால் துன்புற்ற வடக்கு கரோலினாவில், ஏழு பேர் பலியாகியுள்ளனர்.

வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகின்ற பல இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டுள்ளனர்.

மேத்யூ சூறாவளி தற்போது புயலாக தரம் கீழிறங்கி கடலை நோக்கி செல்கிறது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption இறந்தோரை நல்லடக்கம் செய்து வருகின்றனர் ஹேய்ட்டி மக்கள். உயிர் பிழைத்தோருக்கு அதிக அளவிலான உதவி தேவைப்படுகிறது

இந்த சூறாவளி ஹேய்ட்டியில் ஏற்படுத்திய பேரழிவின் முழுமையான பாதிப்புகள் இன்னும் உறுதியாக தெரியவில்லை.

அங்கு 900 -க்கு அதிகமானோர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடிழந்துள்ளனர்.

அங்குள்ள நிலைமை சமாளிக்க முடியாமல் இருப்பதாக தெரிவிக்கின்ற உதவி பணியாளர்கள், உணவு, நீர் மற்றும் உறைவிட வசதி போன்ற உதவிகள் மிகவும் தேவைப்படுவதாக கூறியுள்ளனர்

தொடர்புடைய தலைப்புகள்