போருக்கு அப்பால் இராக்கின் அன்றாட வாழ்க்கை (புகைப்படத் தொகுப்பு)

அன்றாட இராக் பக்கம்
படக்குறிப்பு,

தங்களுடைய சொந்த கிராமத்திற்கு திரும்பி செல்லும் இடம்பெயர்ந்த இராக் சிறுவர்கள்

சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை சமூக பணித்திட்டம் ஒன்றில் ஆவணப்படுத்திய புகைப்படங்களோடு, போரால் அல்லல்படும் தன்னுடைய நாடு குறித்த மாற்று பார்வையை உலகிற்கு வழங்க எண்ணிய இராக்கை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவரின் முயற்சி இது.

பாரம்பரிய சமையல் , இர்பில் அகதிகள் முகாமில் ஆடை தையல் கலைஞர் மற்றும் யூப்ரடிஸ் நதியில் மீன் பிடிக்கும் இளைஞர்கள் போன்ற அனைத்து புகைப்படங்களும் இந்நாட்டிலுள்ள மக்களால் செல்பேசியில் எடுக்கப்பட்டு அன்றாட இராக் என்ற இந்த புகைப்பட கலைஞரின் பணி திட்டத்திற்கு வழங்கப்பட்டவைகள்.

படக்குறிப்பு,

இர்பில் அகதிகள் முகாமில் ஆடை கடையில் தையல் கலைஞரான இராக் பெண்

இராக்கை பற்றி அதிகம் அறிந்திராத மக்கள் பலரும், இந்த நாட்டின் பெயரை கேட்டவுடன், அவர்கள் பார்க்கின்ற மற்றும் வாசிக்கின்ற செய்திகளால், இதுவொரு போர் பிரதேசம் என்று எண்ணுவதாக 25 வயதான அகமத் மௌஸா கூறுகிறார்.

படக்குறிப்பு,

பாக்தாத்திலுள்ள ஒரு பழைய குடியிருப்பிடத்தின் நடைபாதையில் அமர்ந்திருக்கும் சிறுவர்கள்

தன்னுடைய நாட்டின் மேலும் கூடுதலான மனித முகத்தை மக்களுக்குக் காட்ட விரும்புவதாக அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

"இராக்கின் அன்றாட காட்சிகளை ஆவணப்படுத்தி, வரலாற்றில் பதித்து, ஒவ்வொருவரிடமும் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன்".

இராக்கின் அன்றாட காட்சிகளை ஆவணப்படுத்துவதில் பங்களிக்க விரும்புவோர் புகைப்படங்களை தங்களுடைய செல்பேசிகளில் எடுத்து, ஒரு பொதுவான இன்ஸ்டாகிராம் முகவரியில் பதிவிட அவர் கேட்டு கொண்டுள்ளார்.

படக்குறிப்பு,

யூப்ரட்டீஸ் நதியில் மீன் பிடிக்கும் இளைஞர்கள்

2003 ஆம் ஆண்டு அமெரிக்கா உள்ளே நுழைந்து அதிபர் சதாம் ஹூசெயினை அகற்றிய பின்னர் போட்டிக்குழுக்களின் போர்க்களமாக இராக் உருவாகியது.

படக்குறிப்பு,

ஈத் கொண்டாட்டத்தின்போது. பாக்தாத்தில் இதய வடிவிலான விளக்கு அலங்கார வளைவிற்கு முன்னால் தன்னை தானே புகைப்படம் எடுத்து கொள்ளும் இளைஞர்

படக்குறிப்பு,

அன்றாட இராக் என்ற பணி திட்டத்தை நிறுவிய அகமத் மௌஸா எடுத்த புகைப்படம்

படக்குறிப்பு,

பாக்தாத்திலுள்ள தாக்ரிர் சதுக்கத்திற்கு அருகில் பூ ஒன்றை படையினர் ஒருவரிடம் வழங்குபவர்

படக்குறிப்பு,

பாக்தாத்திலுள்ள தன்னுடைய வீட்டில், இராக் டோல்மா கூட்டு தயாரிக்கும் பெண்

படக்குறிப்பு,

டோஹூக்கில் மிதிவண்டி ஓட்டும் குழுவினர்

படக்குறிப்பு,

பாக்தாத் சிறுமியர்

படக்குறிப்பு,

பாக்தாத்திலுள்ள ஷோர்ஜா சந்தையில் தன்னுடைய வண்டியில் வைத்து ஊறுகாய் விற்கின்ற இராக் இளைஞர்

படக்குறிப்பு,

சுலேமானியாவிலுள்ள பூங்காவில் தேனீர் விற்பவர்

படக்குறிப்பு,

நவ்ருஸை கொண்டாடும் வகையில் மெழுகுதிரிகளை ஏற்றி வைத்து பலூன்களை வானில் மிதக்கவிடும் இராக்கியர்