மழைக்காடுகளா? கோக்கோ வருமானமா? ஐவரி கோஸ்டின் நெருக்கடி

உலகின் முன்னணி கோக்கோ உற்பத்தியாளராக ஐவரி கோஸ்ட் திகழ்கிறது.

ஆனால் 40% கோக்கோ பயிரிடுதல் பாதுகாக்கப்பட்ட மழைக்காடுகளிலேயே நடைபெறுகிறது.

மழைக்காடுகளை மீண்டும் உருவாக்கி, சட்டவிரோத விவசாயிகளை வெளியேற்ற வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாக ஐவரி கோஸ்ட் அரசு அறிவித்திருக்கிறது.

அதேசமயம் அரசுக்கு இதில் பெரிய நெருக்கடியும் இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தில் கோக்கோ முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே, மழைக்காடுகளை பாதுகாப்பதா அல்லது நாட்டின் முக்கிய பொருளாதார ஆதாரமான கோக்கோ உற்பத்தியை குறைப்பதா என்கிற நெருக்கடியில் ஐவரி கோஸ்ட் அரசாங்கம் சிக்கியுள்ளது.