ஏமென்: சவுதிக்கான ஆதரவை மறுபரிசீலனை செய்கிறது அமெரிக்கா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஏமென்: சவுதிக்கான ஆதரவை மறுபரிசீலனை செய்கிறது அமெரிக்கா

ஏமெனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி தலைமையிலான கூட்டணியின் இராணுவ நடவடிக்கைக்கான தனது ஆதரவை அவசரமாக மீள் பரிசீலனை செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஏமெனின் சனா நகரில் இறுதிச்சடங்கின் மீது நடந்த வான் தாக்குதலில் 140 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இந்த தாக்குதலையடுத்து யெமெனிய தலைநகர் சனாவில் சவுதி தலைமையிலான படைகளுக்கு எதிராக பெரும் ஆர்பாட்டங்கள் இடம்பெற்றன.

இந்த தாக்குதலில் தனது பங்களிப்பு குறித்து சவுதி அரேபியா ஒப்புக்கொள்ளவில்லை.

இது தொடர்பாக புலனாயப்போவதாக சவுதி அரேபியா உறுதியளித்துள்ளது.