ஹேய்ட்டியில் பஞ்சத்தை தவிர்க்க நீண்ட காலத் திட்டங்கள் இயற்றப்படவேண்டும்: இடைக்கால அதிபர்

சூறாவளி மேத்யூ, ஹேய்ட்டி தீவில் பெரிய அளவில் பயங்கர அழிவை ஏற்படுத்தியுள்ளது என்று ஹேய்ட்டியின் இடைக்கால அதிபர் , ஜோஸ்லம் பிரிவர்ட் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை HECTOR RETAMAL/AFP/Getty Images
Image caption ஹேய்ட்டியில் மேத்யூ சூறாவளி ஏற்படுத்திய பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்கள்

மனித உயிர்கள் ,மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளில் பெரிய இழப்பு நேர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஹேய்ட்டி மக்களுக்கு உடனடியாக தண்ணீர், உணவு மற்றும் மருந்துகள் தேவை. ஆனால் இங்குப் பஞ்சம் ஏற்படாமல் தவிர்க்க நீண்ட காலத் திட்டங்களும் இயற்றப்படவேண்டும் என்று பிரிவர்ட் கூறினார்.

மேலும், ஹேய்ட்டியில் அரசியல் மறுகட்டுமானத்தை சரியான பாதையில் வைத்திருக்க வேண்டும் என்றார் அவர் .

கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழவிருந்த அதிபர் தேர்தல் சூறாவளி காரணமாக ரத்து செய்யப்பட்டது.

வன்முறைகள் மற்றும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், 2015ல் தேர்தல் நிறுத்தப்பட்டதிலிருந்து , ஹேய்ட்டியில் அரசியல் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.