உலகில் ஒவ்வொரு ஏழு நொடிகளுக்கு, ஒரு இளவயது திருமணம் : சேவ் தி சில்ட்ரன்' அறிக்கை

உலகம் முழுவதும், ஒவ்வொரு ஏழு நொடிகளுக்கும், பதினைந்து வயதிற்குக் கீழ் உள்ள ஒரு சிறுமிக்குத் திருமணம் நடக்கிறது என்று 'சேவ் தி சில்ட்ரன்' (Save the Children ) என்று தொண்டு நிறுவனம் அதன் அறிக்கையில் கூறுகிறது.

படத்தின் காப்புரிமை Allison Joyce/Getty Images)
Image caption அதிகரிக்கும் இள வயது திருமணம் (கோப்புப்படம்)

பத்து வயதேயான, பெண் குழந்தைகள் அவர்களை விட வயது அதிகமான ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்தத் திருமணத்தால், அந்தப் பெண் குழந்தைகளுக்குக் கல்வி மறுக்கப்படுகிறது என்றும் பாலியல் வல்லுறவுக்கும், குடும்ப வன்முறைக்கும் ஆளாகும் நிலைக்கு அவர்களை இது தள்ளுகிறது என்றும் கூறியுள்ளனர்.

மோதல்கள் மற்றும் ஏழ்மை போன்றவை தான், ஆப்கானிஸ்தான், ஏமன் , இந்தியா மற்றும் சோமாலியாவில் , அதிக அளவில் நடக்கும் சிறுமிகள் இளவயது திருமணத்திற்கு காரணம் என்று அந்த அறிக்கை குற்றம்சாட்டுகிறது.