ஆப்கானின் தெற்கு மாகாணத்தில் தாலிபான் தாக்குதல், அரச படை குவிப்பு

ஆப்கானில், தெற்கு மாகாணமான ஹெல்மாண்டின் தலைநகரான லஷ்கர் காவின் மீது தாலிபான் தீவிரவாதிகள் தொடுத்துவரும் தாக்குதலை அடுத்து, அம்மாகாணத்துக்கு நூற்றுக்கணக்கான ஆப்கான் படையினர் மற்றும் சிறப்பு படைகள், வந்தடைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை NOOR MOHAMMAD/AFP/Getty Images)
Image caption ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத் தலைநகர் லஷ்கார் காவில் போர் (கோப்புப்படம்)

நகரத்தின் அருகில் உள்ள தாலிபானின் நிலைகளில், ஆப்கான் விமானப் படையின் ஜெட் விமானங்கள் குண்டு தாக்குதல் நடத்தின என்றும், தெற்கு பகுதியில், இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல்கள் நடந்தன என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இரண்டு லட்சம் பேர் வசிக்கும் லஷ்கர் காவில் மக்கள் இந்தச் சண்டை காரணமாக வெளியேற முயற்சி செய்கின்றனர். அந்த நகரம் முழுவதுமாக பூட்டிவைக்கப்பட்டது போல நடமாட்டம் இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஹெல்மாண்ட் ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய மாகாணம் மற்றும் கேந்திர முக்கியத்துவமும், மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது.