சீன ஆயுள் தண்டனை கைதிக்கு உயரிய மனித உரிமை விருது

சீனாவின் சிறைச்சாலை ஒன்றில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் உய்கூர் அறிஞர் ஒருவருக்கு உயரிய மனித உரிமைகள் விருது வழங்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption பொருளாதாரப் பேராசிரியர் இல்ஹாம் டோக்திக்கு ஆயுள் தண்டனை வழங்கியது சீனாவுக்கு வெளியே கவலைகளை ஏற்படுத்தியது

எட்டு முன்னிலை மனித உரிமை அமைப்புக்களின் குழு ஒன்றால் வழங்கப்படுகின்ற மார்ட்டின் என்னல்ஸ் விருது இந்த பொருளாதாரப் பேராசிரியர் இல்ஹாம் டோக்திக்கு வழங்கப்பட்டுள்ளது.

சீனாவின் பெரும்பான்மையான ஹான் இனத்திற்கும், டோக்தியின் சிறுபான்மை உய்கூர் இனக்குழுவுக்கும் இடையில் கலந்துரையாடலையும், புரிதலையும் வளர்க்க இரண்டு தசாப்தங்களை அவர் செலவிட்டுள்ளதாக விருது வழங்குவோர் தெரிவித்திருக்கிறனர்.

அவர் நடுநிலையாளர் என்று அடிக்கடி புகழப்பட்டிருந்தாலும், சீன நீதிமன்றத்தின் சிறியதொரு ரகசிய விசாரணையை தொடர்ந்து பிரிவினைவாதி என குற்றம் காணப்பட்டுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்