66 மில்லியன் ஆண்டுகள் முந்தைய பேரழிவின் தகவல் கண்டுபிடிப்பு

சுமார் 66 மில்லியன் வருடங்களுக்கு முன் பூமியை தாக்கிய விண்கல்லால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பேரழிவு குறித்த, குறிப்பிடத்தக்க புதிய தகவல்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

டைனசர்

பட மூலாதாரம், Getty Images

அந்த 15 கி.மீ விண்கல், வானை இருளாக்கும் அளவிற்கு துகள்களை உருவாக்கி, பருவநிலையை பல மாதங்களுக்கு குளுமையாகவும் மாற்றியது.

டைனசோர் இனம் அழிந்ததற்கான காரணத்தையும் அந்த தகவல்கள் வழங்கலாம் என கருதப்படுகிறது.

தற்போது மெக்ஸிகோ வளைகுடாவாக இருக்கும் பகுதியில், முன்பு தோன்றிய பெரிய பள்ளத்தின் பாறைகளை ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

பேரழிவின் தாக்கத்திற்கு பிறகு, சில ஆயிரம் வருடங்களில் தோன்றிய சிறிய உயிரினங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பூமியிலிருந்து ஏறக்குறைய பிற எல்லா உயிர்களையும் நீக்கிவிட்ட நிகழ்ச்சியின், பரிணாம வளர்ச்சி வாய்ப்பு குறித்த ஆதரங்களையும் அந்த தகவல் வழங்குகிறது.