இந்தோனீஷியாவில் பாலியல் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கும் சட்டம்

  • 12 அக்டோபர் 2016

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்குதல் உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை அளிப்பதற்கு ஆதரவாக இந்தோனேஷிய நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்தோனீஷியாவில் பாலியல் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கும் சட்டம்

பல நாட்களாக நடந்த அனல் பறக்கும் விவாதத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனீஷியாவில் 14 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்; அதை எதிர்த்து அங்கு பெரும் சீற்றம் எழுந்ததை அடுத்து மே மாதத்தில் சட்டங்களில் மாற்றங்களை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார் அதிபர் ஜோகோ விடுடு.

ரசாயன முறையில் ஆண்மை நீக்குதல், எவ்வாறு நடைபெறும் என்பதில் கவலை தெரிவித்து இரண்டு எதிர்க்கட்சிகள் இதற்கு எதிராக வாக்களித்திருந்தன.

மருத்துவ தர்மங்களை மீறும் வகையில் உள்ள இந்த நடவடிக்கையில் தங்கள் உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்படக்கூடாது என இந்தோனீஷிய மருத்துவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.