பிலிப்பைன்ஸ் மற்ற நாடுகளோடு ராணுவ கூட்டை முடிவுக்குக் கொண்டுவராது : டுடெர்டோ

கடந்த வாரம் தென் சீனக் கடலில் அமெரிக்காவோடு நடைபெற்ற ராணுவ பயிற்சிகளை இடைநிறுத்துவதாக அறிவித்த போதும், பிலிப்பைன்ஸ் மற்ற நாடுகளோடு ராணுவக்கூட்டை முடிவுக்குக் கொண்டுவராது என அதிபர் ரோட்ரிகோ டுடெர்டோ அறிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை YE AUNG THU/AFP/Getty Images)
Image caption பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டோ (கோப்புப்படம்)

அடுத்த வாரம் பெய்ஜிங்கிற்குச் செல்லவிருக்கும் டுடெர்டோ, அமெரிக்கா மீது குறைந்த அளவில் தான் சார்ந்திருக்க வேண்டும் என விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார். அவர் முன்னதாக சீனா அல்லது ரஷியா போன்ற நாடுகள் ,தயாராக இருக்கும் மாற்றுக் கூட்டாளிகள் என்றும் குறிப்பிடருந்தார்.

டுடெர்டோவின் போதைப் பொருள் மீதான கொள்கைகள் பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா விமர்சனம் செய்ததற்காக அவரை டுடெர்டோ திரும்பத் திரும்ப சாடினார்.

இந்தக் கொள்கையின் காரணமாக, கடந்த ஜூன் மாதம் முதல், 3,600 சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் பயன்பாட்டாளர்கள் மற்றும் முகவர்கள் கொல்லப்பட்டார்கள்.

தொடர்புடைய தலைப்புகள்